
கோலாலம்பூர், ஆக 6 – சரவா, Mukah வில் SUV வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஷாபு போதைப் பொருள் இருந்ததைத் தொடர்ந்து வெளிநாட்டைச் சேர்ந்த கணவன் -மனைவி கைது செய்யப்பட்டனர்.
வேவு தகவலைத் தொடர்ந்து Mukah மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த போதைப் பொருள் பறிமுல் செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden முகமட் ரிசால் அலியாஸ் (Muhamad Rizal Alias)
தெரிவித்தார்.
அந்த SUV வாகனத்தின் ஓட்டுனரான 33 வயதுடைய ஆடவரும், 47 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டுனர் வைத்திருந்த பேக்கிலிருந்து 22 பிளாஸ்டிக் பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 63.5 கிரேம் எடையுள்ள ஷாபு அல்லது Methamphetamine போதைப் பொருள் 121,000 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு நகைகள் மற்றும் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.