
பாயன் லெப்பாஸ், ஆக 27 – இன்று காலை பினாங்கு பாயன் லெப்பாஸில் உள்ள Taman Tunasஸில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் தனது கணவரால் வெட்டப்பட்டதில் காயமடைந்தார்.
காலை 6 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் அந்த சந்தேக நபர் பிறகு தன்னைத்தானே வெட்டிக் கொண்டதாக பினாங்கு தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சசாலி ஆடம் (Sazalee Adam ) தெரிவித்தார்.
இந்த தம்பதியர் குறித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் துறைக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வண்டி மூலம் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.