
சிங்கப்பூர், ஜூன் 17 – சிங்கப்பூருக்குள் 173,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புடைய 1.4 கிரேம் ஹெரொய்ன் போதைப் பொருளை கடத்த முயன்றை 30 வயது மதிக்கத்தக்க மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார். உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட கடுமையான சோதனையின் போது, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரின் கையுறை பெட்டியின் பின்னால் போதைப்பொருள் இருப்பதாக நம்பப்படும் ஒரு பொட்டலத்தை கண்டுப்பிடித்ததாக குடிநுழைவு ,சோதனை மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பணியகம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதே இடத்தில் அக்காரிலிருந்து மேலும் இரண்டு பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்தார். அந்தப் பொட்டலங்களில் 1,402 கிரேம் ஹெரோய்ன் , 495 கிராம் கஞ்சா மற்றும் 115 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரண தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.