
ஜாசின், டிச 31 – ஜாசினில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் பதின்ம வயது பையன் ஒருவன் கொடுமைப்படுத்தப்படுவதைக் காட்டும் இரண்டு நிமிடம் மற்றும் மூன்று வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியதோடு இது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பையன் தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, பேஸ்புக் கணக்கின் உரிமையாளர் நூர் அஸ்வா ( Nur Azwaa ) இந்த வீடியோவைப் பதிவேற்றியுள்ளது இது சம்பவத்தை மேலும் வேதனையடையச் செய்துள்ளது. அந்த பையன் கீழே விழும்வரை அடித்து மிதித்தது மட்டுமல்லாமல், வீடியோ பதிவு செய்யப்படுவதற்கு முன்பு நீண்ட நேரம் இப்படி நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்று நூர் அஸ்வா கூறினார். அதோடு இந்த சகோதரன் எவ்வளவு நேரம் தனியாகப் போராடினான் என்பதை நினைக்கும்போது மனவேதனை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பையன் தரையில் கிடப்பதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன. மேலும் அதைப் பகிர்வது, கொடுமையான கலச்சாரம் என்பதோடு எவ்வளவு காலம் இதுபோன்ற பகடிவதை தொடரும் என்ற கேள்வியையும் இளைஞர்கள் குறிப்பாக பதின்ம வயதினரிடையே எழுந்துள்ளது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக இதுவரை தனது துறைக்கு எந்த போலீஸ் புகாரும் கிடைக்கவில்லையென ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ரோபர்ட் ( Lee Robert ) தெரிவித்தார்.



