
லூனாஸ், ஏப் 2 – லூனாஸ் பாயா பெசார் நகரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு அன்னை கருமாரியம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கொடியேற்றத்தின் போது, காப்புக்கட்டி விசேஷ பூஜைகள் நடைபெற்றபோது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. எதிர்வரும் ஏப்ரல் திங்கள் 10ஆம்தேதி கருமாரியம்மன் ஆலய இரத ஊர்வலமும், 11ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகம் பெருமிதத்துடன் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளது.
அதோடு இவ்வாலயத்தில் 7 நிலை கொண்ட ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பங்குனி மாதத்திற்குள் இப்பணிகள் முழுமை பெற ஆலய நிர்வாகம் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே பொதுமக்கள்
பெரிய மனதுடன் இயன்ற நன்கொடைகளை வழங்கி தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.