
சியாங் மாய், அக்டோபர்-6, தாய்லாந்து, சியாங் மாயில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக மடிந்துள்ளன.
Mae Taeng மாவட்ட யானைகள் காப்பகம் அத்துயரச் செய்தியை உறுதிபடுத்தியது.
முன்னெச்சரிக்கையாக யானைகளை சற்று உயரமான இடத்திற்கு மாற்றிய போதும், கரைபுரண்டோடிய வெள்ள நீர் ஒட்டுமொத்த கிராமத்தையும் மூழ்கடித்து விட்டது.
30 யானைகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதில், கண் பார்வை இழந்த Mae Ploy Thong உள்ளிட்ட 2 யானைகள் தன் கண் முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக, அக்காப்பகத்தின் தலைவர் சோகத்துடன் கூறினார்.
சியாங் மாய் மக்களிடையே பிரபலமான Pang Fasai என்ற மற்றொரு யானையும் மடிந்திருப்பது, வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு யானை கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டது.
காணாமல் போன மேலும் சில யானைகளையும், எருமை மாடுகளையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சியாங் மாய் வெள்ளத்தில் முன்னதாக 117 யானைகள் காப்பாற்றப்பட்டன.