Latestஉலகம்

உலகின் முதல் விந்தணு திமிங்கில காப்பகம்; உருவாக்குகிறது டொமினிகா

டொமினிகா, நவம்பர் 16 – உலகின் முதல் விந்தணு திமிங்கல காப்பகத்தை டொமினிகா உருவாக்கவுள்ளது.

அந்த காப்பகம் அமைக்கப்படவுள்ள அந்நாட்டின் கடல் பகுதியில், பெரிய கப்பல்களும், வணிக நோக்கம் கொண்ட மீன்பிடி கப்பல்களும் செல்ல தடை விதிக்கப்படும்.

அதோடு, வருக்கையாளர்கள், அப்பகுதியில் வாழும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஊடே நீந்தி மகிழும் வாய்ப்பும் வழங்கப்படுமென கூறப்படுகிறது.

கரீபியன் தீவு நாடான டொமினிகாவின், மேற்கு கரைப்பகுதியில், சுமார் 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், ஒரு பெரிய தீவு அளவிற்கு அந்த காப்பகம் அமைக்கப்படுகிறது.

அதன் வாயிலாக, சுற்றுலா துறையை உந்தச் செய்ய முடிவதோடு, ஆழ்கடலில் இருக்கும் அதிக அளவிலான கார்பன் அல்லது கரியமில வாயுவை பிரிக்கவும் அது உதவுகிறது.

அதனால், சுமார் 50 அடி அல்லது 16 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய, உலகின் மிகப் பெரிய வேட்டை விலங்கான திமிங்கிலங்களை பராமரிப்பதன் வாயிலாக, கடல்வாழ் உயிரினங்களின் இயற்கையான உரைவிடங்களை பாதுகாக்க முடியும் என்பதோடு, உணவு சங்கிலியையும் நிலைநிறுத்த முடியுமென நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!