Latestமலேசியா

DBKL சோதனை ; 41 அபராதம் பதிவுகள் வெளியிடப்பட்டன, ஒரு உணவகத்தை மூட உத்தரவு

கோலாலம்பூர், மார்ச் 8 – தலைநகர் சுற்று வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள உணவு வளாகங்களில், DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், 41 அபராதம் பதிவுகள் வெளியிடப்பட்டன.

சுத்தத்தை பேணாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட உணவகம் ஒன்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

லெம்பா பந்தாயிலுள்ள, தி கார்டன் மோல், செபூத்தேவிலுள்ள, ஜாலான் ராடின், செராசிலுள்ள, ஜாலான் மெரானா காடிங் 1, புக்கிட் பிந்தாங்கிலுள்ள, நூ சென்ட்ரல் ஆகிய இடங்களில் அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அச்சோதனையின் போது, மொத்தம் 63 உணவகங்களை சோதனையிட திட்டமிடப்பட்டது. எனினும், அதில் பத்து செயல்படவில்லை என்பதால், 53 உணவகங்களில் சோதனை நடத்தபட்டதாக DBKL ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

உணவகத்தின் துப்புரவு விதிகளை மீறியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 41 அபராதப் பதிவுகள் வெளியிடப்பட்ட வேளை ; மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட உணகவம் ஒன்றை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!