
ஷா ஆலாம், டிசம்பர் 21- ஷா ஆலாம், செக்ஷன் 25-ல் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பின்புறத்தில், பிளாஸ்டிக் பையினுள் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை சுமார் 7 மணியளவில், பொது மக்களில் ஒருவர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொடக்கக் கட்ட விசாரணையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.
இந்த குழந்தை வேறு இடத்தில் பிரசவிக்கப்பட்டு பின்னர் இங்கு கைவிடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
குழந்தையின் உடல் கிள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.



