Latestமலேசியா

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மலேசியாவின் முதலாவது இஸ்லாமிய மறுவாழ்வு மையம் ஜோகூரில் திறக்கப்படும்

இஸ்கந்தர் புத்ரி , நவ 30 – இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராக ஒரே பாலின உறவுகளை கடைப்பிடிப்பவர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைக்கு உள்ளாகுவதற்காக ஒரு மையத்தை உருவாக்கும் பணியில் ஜோகூர் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அந்த மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். மலேசியாவில் அமைக்கப்படும் முதலாவது மறுவாழ்வு மையமாக அது அமையும் என ஜோகூர் இஸ்லாமிய சமய மத விவகாரக் குழுவின் தலைவரான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் ஃபேர்ட் முகமட் காலித் ஜோகூர் சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போது, ​​இந்த மையத்தை அமைப்பதற்கான தயார் செய்யும் நடவடிக்கை அலுவலகத்திலும், அதன் ஆண் மற்றும் பெண் பயிற்சி விடுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜூலைக்குள் இந்த மையம் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது முகமட் ஃபேர்ட் கூறினார். இதனிடையே 2020 ஆம் ஆண்டு முதல் ஜொகூரில் 2,845 பேர் மற்ற மதங்களிலிருந்து இஸ்லாமிய சமயத்தை தழுவியிருப்பதாக முகமட் ஃபேர்ட் கூறினார். அவர்களில் இந்தியர்கள், சீனர்கள், பூர்வகுடியினர் , கடசான், இபான் ஆகியோரும் சில வெளிநாட்டினரும் அடங்குவர் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!