Latestமலேசியா

இந்தோனேசிய அதிபர் தேர்தல்; ஆரம்ப முடிவுகள் அடிப்படையில் சுபியாண்டோ வெற்றி

ஜகார்த்தா, பிப்ரவரி 15 – இந்தோனேசிய அதிபர் தேர்தலில், முன்னாள் ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக திகழும் இந்தோனேசியாவை அடுத்து யார் வழிநடத்த போகிறார் என்பதை தீர்மானிக்க ஏதுவாக, நேற்று நடைபெற்ற அந்நாட்டின் அதிபர் தேர்தலின் தொடக்க கட்ட முடிவில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட இதர இரு வேட்பாளர்களை காட்டிலும் சுபியாண்டோ இறுதிப் பெரும்பான்மையை பெற்றதே அதற்கு காரணமாகும்.

சுபியாண்டோ இந்தோனேசியாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சரும் ஆவார்.

இந்தோனேசியாவில் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள தலைவர் ஜோகோ விடோடோவின் கொள்கைகளை நிறைவேற்றப்போவதாக சூளுரைத்ததை தொடர்ந்து, சுபியாண்டோ பிரபலமானார்.

எனினும், முறையற்ற வகையில் ஜோகோவி சுபியாண்டோவை ஆதரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருப்பினும், அந்த குற்றச்சாட்டுகளை பின்னுக்கு தள்ளி, சுபியாண்டோ வெற்றி பெறுவார் என இதற்கு முன் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகள் கூறியிருந்தன.

ஜோகோவியின் மகன், சுபியாண்டோவுக்கு இணையாக துணை அதிபராக பதவியேற்பார்.

அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் அடுத்த மாதம் தான் வெளியிடப்படும் என்றாலும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு குழுக்கள், சுபியாண்டோ 57 விழுக்காட்டு வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளதாக கணித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!