Latestமலேசியா

1.2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியது தொடர்பில் கைதான மூத்த போலீஸ் அதிகாரி 3 நாட்கள் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், மார்ச் 25 – லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 40 வயதுடைய அந்த அதிகாரி 1.2 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை பல இடங்களில் பதுக்கி வைத்திருந்தாக கூறப்பட்டது. அந்த அதியாரியுடன் மற்றொரு போலீஸ்காரரும் கோலாலம்பூரில் சூதாட்டம், விபச்சாரம் மற்றும் கும்பல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைப் பாதுகாக்க லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. அந்த மூத்த அதிகாரியும் மற்றொரு போலீஸ்காரரும் கோலாலம்பூரில் சூதாட்டம், விபச்சாரம் மற்றும் குண்டர் கும்பல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை பாதுகாக்க லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.

அந்த போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டு ஒரு நாள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 2021 மற்றும் 2024ஆம் ஆண்டிற்கிடையே அந்த போலீஸ் அதிகாரி கையூட்டுக்களை பெற்று வந்ததாக கூறப்பட்டது. அந்த அதிகாரி நேற்று புத்ரா ஜெயாவில் கைது செய்யப்பட்ட வேளையில் போலீஸ்காரர் ஒருவரும் நேற்று கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார். அந்த இருவரும் கைது செய்யப்பட்டதை MACC யின் உளவுப் பிரிவின் இயக்குனர் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!