Latestமலேசியா

பெரிக்காத்தான் நேசனலுக்கான இந்தியர்கள் ஆதரவை சோதிக்கும் களமாக கோலாகுபு பாரு தேர்தல் இருக்கும் – டாக்டர் ராமசாமி

கோலாலம்பூர், மார்ச் 28 – சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் Kuala Kubu Baharu சட்டமன்ற இடைத் தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு இந்திய ஆதரவுக்கான எச்சரிக்கை சோதனையாக இருக்கும் என பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சியால் அங்குள்ள 18 விழுக்காடு இந்திய வாக்காளர்களில் பாதியை பெற முடிந்தால், பாக்காத்தன் ஹரப்பான் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து வெற்றி பறிக்கப்படலாம் என இன்று வெளியிட்ட அறிக்கையில் உரிமை கட்சியின் தலைவருமான ராமசாமி தெரிவித்தார். மூன்று முறை கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த Lee Kee Hiong நீண்ட கால போராட்டத்திற்குப் பின் மார்ச் 21 ஆம் தேதி இறந்தார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம் சமூகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாக இந்திய வாக்காளர்கள் கருதினால், அவர்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிலைமை மேம்படும் என்று இந்தியர்கள் உறுதியளிக்காவிட்டாலும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்தியர்கள் எதையும் பெற முடியாது, ஆனால் எதிர்க்கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சில விஷயங்கள் பிரகாசமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர் ராமசாமி சுட்டிக்காட்டினார். பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் ஒற்றுமை அரசாங்கத்தின் தோல்வியால் இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் ராமசாமி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!