
புது டெல்லி, ஏப்ரல்-28, பிரபல நடிகர் அஜித் குமார் இன்று இந்திய அதிபர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெறுகிறார்.
அதிபர் மாளிகையில் அந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதையொட்டி அஜித் குமார், தனது மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளுடன் தலைநகர் புது டெல்லி சென்று சேர்ந்துள்ளார்.
பாரத ரத்னா, பத்ம விபூஷனுக்குப் பிறகு இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன், கடந்த ஜனவரியில் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டது.
திரையுலகில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்திய அரசாங்கம் அவ்விருதை அறிவித்தது.
இன்று அதிபரின் கையால் விருதுப் பெறப் போவதால், அவரின் தீவிர இரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
மே 1-ஆம் தேதி அவரின் பிறந்தநாளும் வருவதால், இரட்டைக் கொண்டாட்டமாக அது அமையவுள்ளது.
அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது