
பிறை, அக்டோபர்-6,
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 700-க்கும் மேற்பட்ட தொகுதி மக்களுக்கு தனிப்பட்ட தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியுள்ளார்.
இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்ட அந்நிகழ்வு. பிறை, Chai Leng பல்நோக்கு மண்டபத்தில் நேற்று மாலை பெற்றது.
கடந்தாண்டு 580 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு பெறுநர் எண்ணிக்கை 700-ராக உயர்ந்துள்ளது.
தகுதிப் பெற்ற மற்றும் பதிவுச் செய்த பெறுநர்களுக்கு தலா 120 ரிங்கிட் பெறுமானமுள்ள உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.
“இந்த அன்பளிப்பு பெரியதல்ல என்றாலும், அதனைப் பெற்றுக் கொண்ட மக்கள் முகத்தில் காணப்பட்ட சிரிப்பும் மகிழ்ச்சியும் மனதை நெகிழச் செய்ததாக, சுந்தரராஜூ கூறினார்.
பிறை மக்களின் நலனுக்காக இன, மத வேறுபாடின்றி சேவை செய்வது தான் தனது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய முன்னெடுப்புகள், அன்பு, ஒற்றுமை மற்றும் சமூக இணைப்பின் அடையாளம் என வருணித்த அவர், Penang2030 தொலைநோக்கு மற்றும் ‘நமது பிறை’ திட்டங்களுக்கு ஏற்ப இது தொடரும் என்றார்.
“தீபாவளியின் ஒளி எல்லோரின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் அமைதியையும் நிரப்பட்டும்” என்றும் சுந்தராஜூ வாழ்த்துக் கூறினார்.