
கோலாலம்பூர், ஆகஸ்ட்-20- PLKN 3.0 தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற சுமார் 200 பேர், இவ்வாண்டு Askar Wataniah மற்றும் Perajurit Muda தொண்டூழியப் படைகளில் இணைந்துள்ளனர்.
148 பேர் Askar Wataniah-விலும் 40 பேர் Perajurit Negara-விலும் சேர்ந்துள்ளனர். இது, அத்திட்டத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையிலிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ Mohamed Khaled Nordin கூறினார்.
இது, தற்காப்புத் தொண்டூழியப் படை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நிரந்த மற்றும் வைப்பு உறுப்பினர்களின் வீதம் ஒன்றுக்கு ஒன்று என்ற இலக்கை எட்டுவதை உறுதிச் செய்ய உதவும் என்றார் அவர்.
ஆயுதப்படையின் பலம் தற்போதைக்கு 121,000 பேராக இருக்கும் நிலையில், தொண்டூழியப் படையினரின் எண்ணிக்கை வெறும் 34,086-ராக மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.