
ரெம்பாவ், ஆகஸ்ட்-14 – நெகிரி செம்பிலான் ரெம்பாவில் உயர் சக்தி மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு விபத்துக்குளானதில், ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர் படுகாயமடைந்த வேளை, அவரின் மனைவி மரணமுற்றார்.
புதன்கிழமை இரவு 11 மணியளவில் செனாவாங் – ஆயர் குரோ நெடுஞ்சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மரணமடைந்தவர் 69 வயது Zainab Abdullah என அடையாளம் கூறப்பட்டது.
அவரின் கணவரான 60 வயது Ahmad Abdullah-வுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக, ரெம்பாவ் போலீஸ் கூறியது.
அவர்கள் பயணித்த Kawasaki ER250-C இரக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அவசரப் பாதையில் தடம் புரண்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அதில் பின்னால் அமர்ந்திருந்த மனைவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவர் அலோர் காஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தின் போது விளக்கொளி இல்லாமல் சாலை இருட்டாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.