Latestமலேசியா

நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் கலகம் அல்லது ஒழுங்கீனமாக நடந்து அவையின் மரியாதையை குலைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இனி மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்களவை சபாநாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்ல முன்னுதாரணமாக நடக்கத் தவறுவதைக் குறித்து சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah வெளியிட்ட கண்டனத்தை, “தெளிவான மற்றும் வலுவான செய்தி” என சபாநாயகர் குறிப்பிட்டார்.

மலேசிய இளைஞர் நாடாளுமன்ற சுற்றுப்பயண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தகைய நடத்தை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென எச்சரித்தார்.

கடந்த மாதம், வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த ஆண்டு முழுவதும், உணர்ச்சி வேகம் காரணமாக நாடாளுமன்றத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் முதிர்ந்த ஜனநாயக விவாதத்தின் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் மரியாதையுடனும் ஒழுங்குடனும் நடந்து, முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!