Latestமலேசியா

முஸ்லீம் அல்லாதோரின் உணர்ச்சிக்கும் மதிப்புண்டு; அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாறுவதை நிறுத்த புதியக் கட்சி கோரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர்-9,

அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் மாட்டிறைச்சி பரிமாறுவதை நிறுத்துமாறு, Hati என்ற பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட Parti Hati Rakyat Malaysia அரசியல் கட்சி அதிரடி கோரிக்கை விடுத்துள்து.

இந்நடவடிக்கை, இந்து மற்றும் புத்த மதங்களின் குறிப்பிட்ட உணவு மறுப்பு உணர்வுகளை மதிக்கும் நோக்கத்தைக் கொண்டதென, கட்சித் தலைவர் சான் சே யூவென் (Chan Tse Yuen) கூறினார்.

அரசாங்க நிகழ்ச்சிகளில் பன்றி மற்றும் ஹலால் அல்லாத உணவுகள் முஸ்லீம் மத உணர்வுகளை மதித்து ஏற்கனவே தவிர்க்கப்பட்டு வருவது வழக்கமாகும்.

ஆனால் மாட்டிறைச்சி குறித்து இதுவரை எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாததை அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, அரசாங்க நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி உணவு பரிமாறுதலை தடைச் செய்து உத்தரவு வெளியிடுமாறு அவர் அமைச்சரவையை வலியுறுத்தினார்.

Tourism Malaysia சம்பந்தப்பட்ட ஒரு விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்டதால் எழுந்த சர்ச்சைக்கு மத்தியில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!