
கோலாக் கிராய், ஜன 2 – திருமண விருந்தின் கொண்டாட்டமான சூழ்நிலையின்போது, நேற்று மாலை திடீரென தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால், 50க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் KUALA KRAI, Lata Rek, Chatel Damai ஆற்றில் விழுந்ததால் பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகினர்.
ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் தொங்கும் பாலத்தில் இருந்தபோது பிற்பகல் 2 மணிக்கு இச்சம்பவம் ஏற்பட்டதாக Mukim Lata Rek Penghulu முகமட் ஜாகி சாரி (Mohd Zaki Saari ) தெரிவித்தார்.
Pasir Putehவைச் சேர்ந்த மணமகனின் குடும்பத்தினர் அந்த நேரத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் மணமகளின் விருந்தினர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு அவர்கள் பாலத்தில் இருந்தனர்.
இந்த சம்பவத்தின் விளைவாக, ஆற்றுப் பாறையில் விழுந்த ஒருவருக்கு கால் உடைந்தது, காயத்திற்குள்ளான ஒரு குழந்தையின் தலையில் பல தையல்கள் போடப்பட்டன. மேலும் மூவருக்கு சிறிய அளவில் காயங்கள் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அந்தப் பகுதியில் இருக்கும் ஐந்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த தொங்கும் பாலம் பெரிய வசதியாக இருந்ததால், இதற்கு முன்பு அப்பாலம் பல முறை சரிசெய்யப்பட்டதாக Mohd Zaki கூறினார்.
இதனிடையே சம்பவம் நிகழ்ந்த இடத்தை Manek Urai சட்டமன்ற உறுப்பினர் பவ்சி அப்துல்லா ( Fausi Abdullah ) நேற்று மாலையில் பார்வையிட்டார்.
சிமெண்டில் பதிக்கப்பட்ட தொங்கும் பாலத்தின் இணைப்பு கயிறு தேய்ந்ததால் , அதனை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரியவந்தது.



