Latestமலேசியா

மூவாரில் மாணவிகளின் படங்களை வைத்து மோசமான AI வீடியோ உருவாக்கம்: 3 மாணவர்கள் பள்ளியிலிருந்தே நீக்கம்

மூவார், டிசம்பர்-5 – ஜொகூர், மூவாரில் உள்ள ஒரு சீன தனியார் பள்ளியின் 3 மாணவன்கள், சக வகுப்பு மாணவிகளின் படங்களை பயன்படுத்தி அவர்களின் அனுமதி இல்லாமல் அசிங்கமான AI deepfake படங்களை தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பள்ளியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.

அப்படி போலியாக உருவாக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்ததால் அதிர்ச்சியடைந்த 2 மாணவிகள் போலீஸில் புகார் செய்ததை அடுத்து, இவ்விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

திங்கட்கிழமை அது குறித்து தெரிய வந்ததும் விசாரணைத் தொடங்கியதாகக் கூறிய மூவார் Chung Hwa உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் Chionh Cheong Kang, சம்பந்தப்பட்ட 3 மாணவன்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டதாகக் கூறினார்.

இதுபோன்ற செயல்களை அனுசரித்துப் போகும் பேச்சுக்கே இடமில்லை என்பதால் பள்ளி விதிமுறைகளின் படி, அந்த படிவம் 2, 3 மற்றும் 4 மாணவர்களை நீக்க முடிவுச் செய்யப்பட்டது.

அதனை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டனர்.

பொறுப்பற்ற அம்மாணவன்களில் செயல்களால் மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் போலீஸில் புகார் செய்யுமாறும் பள்ளி முதல்வர் அறிவுறுத்தினார்.

இவ்வேளையில், சம்பந்தப்பட்ட 2 மாணவிகள் செய்த புகார்கள் குறித்து தீவிர விசாரணை தொடங்கியிருப்பதை மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!