Latestமலேசியா

ஈப்போவில் காரினால் மோதப்பட்டு மாணவன் மரணம் தொடர்பில் போலீஸ் அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும்

ஈப்போ, டிச 18- ஈப்போவில் 17 வயது மாணவன் காரினால் மோதப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பில் அக்காரை ஓட்டிய மூத்த போலீஸ் அதிகாரிக்கு எதிராக இன்று கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்படவுள்ளது.

விசாரணை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சாட்சியத்தின்படி சம்பந்தப்பட்ட 44 வயது போலீஸ் அதிகாரி மீது கொலை குற்றஞ்சாட்டு கொண்டு வருவதற்கு போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாக சட்டத்துறை தலைவர் டத்தோ அஹ்மத் டெர்ருடின் சாலே நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

எனவே குற்றவியல் சட்டத்தின் 302 விதியின் கீழ் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த போலிஸ் அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பின்னர்,
இந்த வழக்கு ஈப்போ உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும்.

வெள்ளிக்கிழமை முதல் இந்த விவகாரம் தொடர்பில் 12 புகார்களை போலீசார் பெற்றுள்ளதாகவும் அவற்றில் சில புகார்களை பொதுமக்கள் செய்துள்ளதாகவும் அவர் தெரிவிதார்.

வெள்ளிக்கிழமை மதியம் 12. 40 மணியளவில் ஜாலான் தாமான் ஜாதியில் நிகழ்ந்த விபத்தில் மாணவன் முகமது ஜாஹ்ரிப் அஃபெண்டி மரனமடைந்தான்.

தலை மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அம்மாணவன் மரணம் அடைந்ததாக அவனது உடலில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!