
கோலாலம்பூர், ஜன 22 – ராணுவத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது மனைவி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் 2.197 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தனி நீதிமன்றங்களில் நீதிபதி அல்வி மற்றும் ரோஸ்லி அகமட் முன்னிலையில் 57 வயதுயை ஹபிசுடின் ஜன்தான்
( Hafizuddeain Jantan ) மற்றும் 26 வயதான சல்வானி அனுவார் @ கமாருதீன் (Salwani Anuar @ Kamaruddin ) ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து மொத்தம் 2,122,400 (21 லட்சத்து 22,400 ரிங்கிட்) வருமானத்தைப் பெற்றதாக ஹபிசுடின் மீது குற்றம் சாட்டப்பட்டது, அவை 969,000 ரிங்கிட் , 474,850 ரிங்கிட் , 488,550 ரிங்கிட் மற்றும் 190,000 ரிங்கிட் என நான்கு தவணைகளாக அவரது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதிக்கும் 2025ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம்தேதிக்குமிடையே டமன்சாரா ஹைட்சில் இக்குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு 250,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் மீதான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு மார்ச் 30ஆம்தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதே வேளையில் Salwaniக்கு 30,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.
அதோடு Hafizuddeain மற்றும் Salwani ஆகிய இருவரும் மாதத்திற்கு ஒருமுறை MACC அலுவகத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு அவர்களது கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.



