
கோலாலம்பூர், டிசம்பர் 18 – சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டிய இனவகையைச் சார்ந்த பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN, ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளது.
நேற்று, Jalan Kuala Klawang, Genting Peres மற்றும் Semenyih ஆகிய பகுதியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின்போது இந்தச் சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டன.
கைதான அந்த 36 வயதுடைய உள்ளூர் நபர், PERHILITAN-னின் செல்லுபடியாகும் அனுமதி இன்றி காட்டுப் பகுதிகளில் பாதுகாக்கப்ட பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
PERHILITAN, PGA Batalion 4 மற்றும் FRU ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், சுமார் 9,460 ரிங்கிட் மதிப்பிலான ஒரு பறவைக் கூண்டு, சாக்கு, கைப்பேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சந்தேக நபர் அம்பாங் மற்றும் ஹூலு லங்காட் காடுகளில் தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், சில பறவைகளை வைத்திருந்து, மற்றவற்றை புலனத்தின் வாயிலாக விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது அந்நபர் அம்பாங் ஜெயா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



