Latestமலேசியா

புத்தாண்டு கொண்டாட்டம்; தலைநகரில், 3 இடங்களிலிருந்து 3.06 டன் குப்பைகளை சேகரித்தது ஆலாம் புளோரா

கோலாலம்பூர், ஜனவரி 1 – தலைநகரில், நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற மூன்று இடங்களில் இருந்து, 3.06 டன் குப்பைகளை, ஆலாம் புளோரா பணியாளர்கள் சேகரித்துள்ளனர்.

புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் திரண்டிருந்த புக்கிட் பிந்தாங், மெர்டேக்கா சதுக்கம் மற்றும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் ஆகிய மூன்று இடங்களில், நேற்றிரவு மணி பத்துக்கு தொடங்கிய துப்புரவு பணிகள் இன்று காலை மணி எட்டுக்கு நிறைவடைந்தன.

அதில் குறிப்பாக, புக்கிட் பிந்தாங்கில் மட்டும், 1.98 டன் எடையிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக, கோலாலம்பூர் ஆலாம் புளோராவின், வட்டார சேவை இயக்குனர் சைபுல் அஜிம் தெரிவித்தார்.

மெர்டேக்கா சதுக்கத்திலும், பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திலும் முறையே 0.19 டன் மற்றும் 0.29 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

பொதுமக்களின் வசதிக்காக, சம்பந்தபட்ட பகுதிகளில், பெரிய கொள்கலவை கொண்ட குப்பை தொட்டிகளை ஆலாம் புளோரா ஏற்பாடு செய்திருந்தது.

அதன் வாயிலாக, குப்பைகளை எளிதாக சேகரித்து அகன்ற முடிந்ததாக சைபுல் சொன்னார்.

அதோடு, அந்த துப்புரவு பணிகளுக்காக, ஆலாம் புளோரா கூடுதல் பணியாளர்களை நியமித்திருந்ததோடு, கூடுதல் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!