Latestமலேசியா

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் மரணம், 6 பேர் காயம்

ரெம்பாவ், ஜன 15 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 226.5ஆவது கிலோமீட்டரில் இன்று காலையில் நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் மரணம் அடைந்ததோடு மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

காலை மணி 5.50 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே லோரி ஓட்டுனர் உட்பட இருவர் இறந்த வேளையில் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது இறந்தார்.

மலாக்காவின் ஆயர் கெரோவிலிருந்து (Ayer Keroh) சிரம்பான் செனவாங்கை (Senawang) நோக்கிச் சென்ற மண் மற்றும் பூச்செடிகளை ஏற்றிச் சென்ற Mitsubishi Fuso லோரி கவிழ்ந்ததைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டது என முன்னோடி விசாரணையில் தெரியவந்ததாக ரெம்பாவ் (Rembau) மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Shaik Abd Kadar Shaik Mohamed கூறினார்.

இரு வங்காளதேச உதவியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த லோரி சாலையின் இடதுபுறம் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது சாலையின் வலது புறத்திலுள்ள இரும்பில் மோதியபின் கவிழ்ந்தது.

அந்த சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த 21 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற ஹோன்டா (Honda City ) கார் அந்த லோரியில் மோதியது . அதனை தொடர்ந்து , 29 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற BMW ரக காரும், மற்றொரு Toyota Vios காரும் லாரியின் மீது பின்னால் மோதியதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!