
பேரா, ஆகஸ்ட்-14- பேரா சித்தியவானில் , ஸ்ரீ கம்போங் ஆச்சேயில் உள்ள ஸ்ரீ சண்முகர் ஆலயத்தில் கல்வி யாகம் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. பேரா மாநில அமால் மக்மூர் சமுக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ சண்முகர் நாதர் ஆலய பொறுப்பாளர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் திரளான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
மாணவர்கள் யாகத்தில் பங்கேற்கும் முன்பு பால் குடங்கள் ஏந்தி காணிக்கை செலுத்தினர். அமால் மக்மூர் இயக்கத்தின் செயலாளர் க. நாச்சிமுத்து முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலயத் தலைவர் டத்தோ . வ. இளங்கோ , தமிழகத்தைச் சேர்ந்த தன்முனைப்பு பேச்சாளர் வழக்கறிஞர் லோகையா துளசி ராமன் , பேரா மாநில முத்தமிழ் பாவளர் மன்றத் தலைவர் அருள் ஆறுமுகம் கண்ணன் ஆகியோரும் உரையாற்றி நிகழ்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் கடந்த ஆண்டு எஸ். டி.பி. எம் , எஸ். பி. எம். தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கியதுடன் , சிறந்த பெற்றோர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் கௌரவிக்கபட்டனர். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் ஊக்கப்படுத்தவும் இந்ந கல்வி யாகத்தை ஏற்பாடு செய்ததாக ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான க. நாச்சிமுத்து கூறினார்.