
கோலாலம்பூர், ஜூலை 2 – கடந்த மாதம், பிரிக்ஃபீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர்களை காவல் துறையினர்கள் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர்கள் அனைவரும் தப்பிக்க முயன்றுள்ளனர் என்றும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் கோலாலம்பூர் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜான் முகமது தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறைக்கு போதைப்பொருள் மற்றும் குண்டர் கும்பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்தான் முக்கிய காரணமென்று மேல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தோட்ட உறையை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக இதுவரை 20 நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.