
கோலாலம்பூர், ஜூலை-26- தலைநகர், புக்கிட் லேடாங்கில் (Bukit Ledang) உள்ள துன் Dr மகாதீர் மொஹமட்டின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளைப் போய், 1.8 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே கொள்ளையிடப்பட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் இடைக்கால தலைவர் டத்தோ மொஹமட் உசுஃப் ஜான் (Datuk Mohamed Usuf Jan) தெரிவித்தார்.
சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. CCTV கேமரா பதிவைப் போட்டுப் பார்ப்பது உள்பட சம்பவ இடத்தில் விசாரணைகள் தொடருவதாக அவர் சொன்னார்.
வீட்டின் பின்பகுதி வேலிக்கதவு அறுக்கப்பட்டு, படுக்கையறை அலங்கோலமாக இருந்தது கண்டு, வீட்டுப் பணிப்பெண், புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மகாதீரின் பேரப்பிள்ளைக்கு அவசரத் தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக வீடு திரும்பியவர், தனது நகைகள் காணாமல் போனதையறிந்து போலீஸில் புகார் கொடுத்ததாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.