கோலாலம்பூர், அக்டோபர் 23 – நாட்டிலுள்ள மின்னியல், மின்னணு சார்ந்த கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வாய்ப்புகளை அதிகாரிக்கும் நோக்கில், இன்று TNT தொடர்பு நிறுவனம், ESG மலேசிய, மற்றும் TM Enviro ஆகிய நிறுவனங்கள் கருத்திணக்க உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன.
மலேசியாவில், மின்னணுக் கழிவுகளை அகற்றுவதில் நிலையான செயல் நெறிமுறைகளுக்கு TNT தொடர்பு நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் Eugene Woo தெரிவித்தார்.
இந்த செயல்முறையில் TM Enviro நிறுவனம், e-waste பொருட்களைச் சேகரித்து அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி தேவன் பத்மா விவரித்தார்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைப்பேசி, கணினி, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி போன்ற அனைத்து வகையான மின்னியல் சாதனங்கள் முதலியவை பயன்படுத்த முடியாத நிலையில் அது குப்பையாக மாறுவதைத்தான் மின்னணு கழிவுகள் என்கிறோம்.
இதை வீணே தூக்கி எறிந்து சூழியல் சீர்கேட்டிற்கு வித்திட, TM Enviro நிறுவனத்திடம் கொடுத்தால், அதற்கான பணம் கொடுக்கப்படும் என்றார் TM Enviro நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கண்ண பத்மா.
TNT தொடர்பு நிறுவனம், ESG மலேசியா மற்றும் TM Enviro நிறுவனத்துடன் இணைந்து இன்று குப்பையிலிருந்து தொழில்நுட்பம் வரை எனும் மலேசியா ESG-waste-யின் பங்களிப்பைக் குறித்த நிகழ்ச்சியை ஏற்பாடுச் செய்திருந்தது.
பழைய மின்னியல் பொருட்களைப் புதியதாக மறுசுழற்சி செய்யும் முயற்சிகளில், குறிப்பாக சமூகம் மற்றும் நாட்டில் உள்ள மின்னணு நிறுவனங்களுக்கு இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து செயல்பட இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கிய முதுகெலும்பாக விளக்குகிறது.