Toll கட்டண உயர்வு நிறுத்தம்: நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு & தரம் பாதிக்காது – LLM

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 20 – அடுத்த ஆண்டு 10 முக்கிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை உயர்த்த போவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ள நிலையில், நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு, தரம் மற்றும் பராமரிப்பு பாதிக்கப்படாது என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையமான LLM உறுதி அளித்துள்ளது.
டோல் அமைந்திருக்கும் சாலைகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதை தமது தரப்பு தொடர்ந்து கண்காணிக்கும் என்று LLM இயக்குநர் சசாலி ஹரூன், தெரிவித்தார்.
ஓய்விடங்கள் மற்றும் சேவை மையங்கள் மேம்படுத்தப்படுவதுடன், மின்சார வாகன சார்ஜர்கள் போன்ற நவீன வசதிகளும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்து பயண நேரத்தை சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுளது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவால் அரசுக்கு சுமார் 591.56 மில்லியன் ரிங்கிட் செலவு ஏற்படும் நிலையில், தினமும் சுமார் 10 லட்சம் சாலை பயனாளர்கள் பயன் பெறுவார்கள் என LLM தெரிவித்துள்ளது.



