
கோலாலம்பூர், அக்டோபர் 9 –
வரிசையை கடக்க முயன்றபோது போக்குவரத்து போலீசை வாகனத்தால் மோதிய எம்.பி.வி (MPV) ஓட்டுநர் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்தக் காணொளியில் டொயோட்டா Vellfire ஓட்டுனர், வாகன நெரிசலை கடக்க முயன்றபோது கடமையில் இருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் அந்நபரைத் தடுத்து நிறுத்த முற்பட்டார்.
அதிகாரியின் உத்தரவை பின்பற்றுவதற்கு பதிலாக, அந்த ஆடவன் திடீரென வாகனத்தை முன்னே கொண்டு சென்று அதிகாரியை மோதிவிட்டு உடனடியாக தப்பி சென்றான்.
முகநூலில் பகிரப்பட்ட அந்த வீடியோவிற்கு வலைத்தளவாசிகள் கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட மரியாதையற்ற ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளை மதித்திட வேண்டும் என்றும் கருத்துரைத்து வருகின்றனர்.
மேலும் பணியில் இருந்த அரசுப் பணியாளரைத் தடுத்ததற்காக ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் கொதித்தெழுந்தார்