பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-22 – மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள KK Mart கடையில் சிவப்புச் சாயம் வீசப்பட்டது தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்ததாக, கடைப் பணியாளர் தனது புகாரில் கூறியுள்ளார்.
கடையின் கதவில் சிவப்புச் சாயம் வீசப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.
இதையடுத்து சதிநாச வேலை தொடர்பில் விசாரணை நடைபெறுவதாக அவர் சொன்னார்.
KK Mart கடையில் சிவப்புச் சாயம் வீசப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டுமென அங்குள்ள மாணவர் அமைப்பும் முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தியிருந்தது.
Cheese and ham சன்விட்ச் ரொட்டிகளில் ஹலால் முத்திரை இருந்ததாக அண்மையில் வெடித்த சர்ச்சைக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்புண்டா என தெரியவில்லை.
ஆனால் பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி நடந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவ்வமைப்பு கூறியது.
பொருட்களைச் சேதப்படுத்துவது பார்ப்பதற்கு சிறியக் குற்றம் போல் தெரியலாம்; ஆனால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அதற்கு தண்டனை விதிக்க முடியுமென அது சுட்டிக் காட்டியது.