கோலாலம்பூர், நவம்பர்-11, UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பகடிவதை சம்பவம் நிகழ்ந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
இம்முறை முதலாமாண்டு மாணவர் விலா எலும்பு மற்றும் முதுகெலும்பு முறிவுக்கு ஆளாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நான்காமாண்டு மூத்த மாணவரால் இரண்டாமாண்டு மாணவர் இஸ்திரி பெட்டியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த ஒரு நாளுக்கு முன் அக்டோபர் 21-ஆம் தேதி இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.
UPNM சுங்கை பீசி முகாமில் திடலில் அணிவகுப்புப் பயிற்சியின் போது, மூன்றாமாண்டு மாணவரால் பலங்கொண்டு நெஞ்சுப் பகுதியில் மிதிக்கப்பட்டதால் 19 வயது அம்மாணவர் படுகாயமடைந்தார்.
தற்போது மருத்துவமனையில் அவர் சிகிசைப் பெற்று வரும் நிலையில், குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவத்தை கோலாலம்பூர் போலீஸ் விசாரித்து வருகிறது.
UPNM இரண்டாமாண்டு மாணவரை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்ததாக நான்காமாண்டு மாணவர் கடந்த வியாழக்கிழமை தான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அங்கு மீண்டுமொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.