
அலோர் காஜா, டிசம்பர் 11 – நெடுஞ்சாலையில் ‘zig-zag’ முறையில் பேருந்தைச் செலுத்திய ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று Taman Angkasa Nuri-யில் சம்பந்தப்பட்ட அந்த பேருந்தும் பெரோடுவா ஆக்சியா வாகனமும் திடீரென பிரேக் அடித்து, ஒன்றையொன்று கடந்து ஆபத்தான முறையில் ‘zig-zag’ போல் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு சிறுநீர் பரிசோதனை மேற்கொண்டபோது அவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
போலீசார் பேருந்து ஓட்டுனரை கைது செய்து, ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே வேளை இரு ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டைதான் இச்சம்பவத்திற்கு காரணமாய் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.



