Latestஉலகம்

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வெறும் 30 நிமிடமா? அதிவிரைவுப் பயணம் சாத்தியமே என்கிறார் இலோன் மாஸ்க்

நியூ யோர்க், நவம்பர்-17 – உலகின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயணத்தை ஒரு மணி நேரத்திற்குள் அடக்கி விடும் ஆற்றல், தனது Space X நிறுவனத்திற்கு இருப்பதாக உலகின் பெரும் பணக்காரர் இலோன் மாஸ்க் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து வரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆட்சியின் போது அது சாத்தியமாகலாமென அவர் சொன்னார்.

X தளப் பயனர் ஒருவர், வீடியோவை பகிர்ந்து டிரம்ப் ஆட்சியில் உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு 1 மணி நேரத்திற்குள் பயணிக்கும் காலம் வருவதும் சாத்தியமே என பதிவிட்டிருந்தார்.

அதனை ஆமோதிக்கும் வகையில் தான், இலோன் மாஸ்க் அவ்வாறு கூறியுள்ளார்.

விண்வெளித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள Space X நிறுவனத்தின் Starship ராக்கெட் விண்கலம் வாயிலாக ‘அக்கனவு’ சாத்தியமே எனக் கூறப்படுகிறது.

நாசாவிடமே இல்லாத தொழில்நுட்பமாக, ஏவிய இடத்திற்கே திரும்பும் ஆற்றலை Starship விண்கலம் கொண்டுள்ளது.

ஆகையால், Los Angeles-சிலிருந்து கனடாவின் Toronto-வுக்கு வெறும் 24 நிமிடங்களிலும், நியூ யோர்க்கிலிருந்து லண்டனுக்கு 29 நிமிடங்களிலும், இந்தியாவின் புது டெல்லியிலிருந்து அமெரிக்காவின் San Francisco-வுக்கு நம்ப முடியாத அளவுக்கு வெறும் 30-தே நிமிடங்களிலும் பயணிக்கலாம்.

ஒரு தடவை ஆயிரம் பேர் அதில் பயணிக்க முடியுமென Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவேளை இலோன் மாஸ்க்கின் அக்கனவுத் திட்டம் சாத்தியமானால், தற்போது போல் பல மணி நேரங்கள் அல்லாமல் வெறும் நிமிடங்களில் நாம் கண்டம் விட்டு கண்டம் போய் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!