
லான்சிங், ஜனவரி-20 – அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வலுவான பனிப் புயலால் சாலைகளை பனிக்கட்டிகள் மூடியதில், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு பெரிய விபத்தில் சிக்கின.
திங்கட்கிழமை காலை Interstate 196 சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மோசமான பனிப் பொழிவால் பார்வை தெளிவில்லாமல் போய், 100-க்கும் கார்கள், லாரிகள், டிரக் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
இதையடுத்து இரு வழிப் பாதைகளும் போக்குவரத்து மூடப்பட்டன.
மீட்புப் பணியின் போது பலர் காயமடைந்திருந்தனர்; ஆனால் உயிர்ச்சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்கள், சாலையில் பனிக் கட்டிகள் அப்புறப்படுத்தப்படும் வரை, அருகிலுள்ள பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டனர்.
பனிப்பொழிவு மேலும் மோசமடையும் என வானிலை ஆய்வு துறை கூறியுள்ளதோடு, தேவையற்ற வெளிப் பயணங்களைத் தவிர்க்குமாறு வாகனமோட்டிகளை அறிவுறுத்தியது.



