
செப்பாங், மார்ச்-2 – சிலாங்கூர், டெங்கில் அருகேயுள்ள தேசியப் பள்ளியொன்றில் 6-ஆம் வகுப்பு மாணவியுடன் ஆண் ஆசிரியர் ‘தகாத’ உறவு வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
டிக் டோக், Love 8, WhatsApp போன்ற செயலிகள் வாயிலாக ஆசிரியர் அடிக்கடி மகளைத் தொடர்புக் கொண்டது தந்தைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது; சாதாரணமாக ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருக்கும் உறவு போல் அது இல்லை என, அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து 26 வயது தந்தை புதன்கிழமை போலீஸில் புகார் செய்ததாக, செப்பாங் போலீஸ் தலைவர் Norhizam Bahaman கூறினார்.
உடனடியாக அந்த 30 வயது ஆசிரியர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.
அம்மாணவியும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவளுக்கு காயங்கள் எதுவுமில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
அச்சம்பவம் 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.