
திரெங்கானு, மார்ச் 11 – பாடாங் நேனாஸ், திரெங்கானு அருகே உள்ள ரமலான் சந்தையில் ஒரு கடையில் இருந்து வாங்கிய ஆயம் மசாக் கிச்சப் உணவில் இரண்டு கரப்பான்பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் பெண் ஒருவர்.
TikTok பகிரப்பட்ட அந்த வீடியோவில், அவர் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் இரண்டு கரப்பான் பூச்சிகள் இருப்பது தெரிகிறது.
இந்தப் பதிவ்ய் கலவையான கருத்துகளைப் பெற்று வரும் நிலையில், அதிகாரத் தரப்பினர் சுகாதாரம் மற்றும் கொடுக்கின்ற பணத்துக்கு தூய்மையான உணவை அங்காடி வியாபாரிகள் வழங்க வேண்டுமல்லாவா என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் வலைத்தளவாசிகள்.