
ஜோகூர், ஆகஸ்ட் 13 – வருகின்ற ஆகஸ்ட் 28 முதல் 31 ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, ஜோகூர் புக்கிட் இண்டா செர்பாகுனா மண்டபத்தில் ‘இணைவோம் உயர்வோம்’ எனும் கருப்பொருளில் ஜோகூர் இந்திய வணிக விழா 2025 மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் மக்களைக் கவரும் வகையிலான பல சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளதோடு ஆகஸ்ட் 28 ஆம் தேதி, பள்ளி மாணவர்களுக்கான Mathletics எனும் கணக்கியல் போட்டி நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி Technova Robotics Innovation Championship எனும் மலேசிய சாதனை புத்தக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதோடு ஆகஸ்ட் 30 ஆம் தேதி Robotrack Championship மற்றும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மெர்டேக்கா குலுக்கள் பரிசுகளும் போஸ்டர் போட்டியும் இடம்பெறவுள்ளன.
அது மட்டுமா, இவ்விழாவின் போது சிறப்பு அதிர்ஷ்ட குலுக்கல் வாய்ப்புகளும் பல பரிசுகளும் மக்களுக்காக காத்திருக்கின்றன.
சுவையான உணவுகள், அழகிய ஆபரணங்கள், பலவகை பொருட்கள், சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் யாவும் ஒரே இடத்தில் இடம்பெறும் ஒரு மாபெரும் வணிக விழா இது.
இவ்விழாவிற்கு அனைவரும் தத்தம் குடும்த்தினருடன் கலந்துக் கொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்க வேண்டுமென்று ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.