பிரேசில், ஜூலை 8 – கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கிய, பிரதமர் மற்றும் அவர்தம் குழுவினரின் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் பயணம், வெற்றிகரமாகவும் நாட்டிற்கு பயனளிக்க கூடிய ஒன்றாகவும் அமைந்துள்ளது
இந்த பயணம் முதலீடு அல்லது வர்த்தகத்தை ஈர்ப்பதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டிராமல், அரசாங்கங்களுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை வலுபடுத்தும் வண்ணத்திலும் அமைந்ததென்று என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அம்மூன்று நாடுகளின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடானான சந்திப்புகளின் போது, இஸ்ரேல் போரை குறித்தும் தாம் விவாதித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வருகின்ற 17வது பிரிக்ஸ் மாநாட்டில் பன்முகத்தன்மை என்ற கருத்தை ஊக்குவிக்கும் மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு மற்ற நாடுகளும் உடன்படுவதாக அறியப்படுகின்றது