
கோலாலம்பூர், டிச 11 – சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி, காணாமல் போன எம். இந்திரா காந்தியின் மகனைக் கண்டுபிடிப்பதில் சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் தரப்பு தொடர்ச்சியான கடப்பாட்டை கொண்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
நேற்று மாலை புக்கிட் அமானில் பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகளின் சீரமைப்புக்கான துணையமைச்ச எம். குலசேகரன் , சமூக ஆர்வலர் அருண் துரைசாமி ஆகியோருடன் இந்திரா காந்தி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் காலிட் இஸ்மாயிலை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, இந்திரா காந்தியின் மகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு , தனது தரப்புக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கும்படியும் காலிட் கேட்டுக்கொண்டார்.
பிள்ளையை கண்டுப்பிடிக்கும் செயல்முறைக்கு உதவுவதற்காக எந்தவொரு பொதுத் தகவலையும் போலீஸ் வரவேற்பதாக அவர் கூறினார்.
பெறப்பட்ட அனைத்து தகவல்களும் தொழில்முறை ரீதியாக ஆராயப்பட்டு , நடைமுறையில் உள்ள விசாரணை நடைமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு நடவடிக்கையும் நேர்மை, நிபுணத்துவ மற்றும் சட்டத் தேவைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்று காலிட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்



