
செப்பாங், மார்ச்-13 – நாட்டின் இன மற்றும் மத பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு எச்சரித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்படாமலிருக்க அது அவசிமென்றார் அவர்.
பெரும்பான்மையினரோ சிறுபான்மையினரோ, யாராக இருந்தாலும் மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்து அதன் மூலம் குளிர் காய நினைத்தால், அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்.
இது அமைச்சரவையின் முடிவு என, பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
முன்னதாக, ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் சிக்கிய ஏரா வானொலிக்கு, மலேசிய தொடர்பு- பல்லூடக ஆணையமான MCMC 250,000 ரிங்கிட் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
உரிமம் பறிக்கப்படுவதிலிருந்து தப்பித்தாலும், சற்று கடுமையான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலைக்கு ஏரா வானொலி ஆளாகியுள்ளது.