வாஷிங்டன், செப்டம்பர்-20 – செப்டம்பர் இறுதியில் பூமி தற்காலிகமாக ‘இரண்டாவது நிலாவைப்’ பெறவிருக்கின்றது.
அர்ஜூனா கோட்டில் உள்ள 2024 PT5 என்றழைக்கப்படும் சிறிய கோள், பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, 53 நாட்களுக்கு பூமியை சுற்றி வரவுள்ளது.
செப்டம்பர் 29 தொடங்கி நவம்பர் 29 வரை சுமார் 2 மாதங்களுக்கு ‘இரண்டாவது நிலாவாக’ அது பூமியைச் சுற்றுகிறது.
அதன் பிறகு விண்வெளியில் அச்சிறுக்கோள் தனது பயணத்தைத் தொடரும்.
இந்த ‘இரண்டாவது நிலா’ நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், சாதாரண கண்களுக்கோ அல்லது வீட்டில் வழக்கமாக நாம் பயன்படுத்தும் தொலைநோக்கிக் கருவியிலோ (telescope) அது தென்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது விட்டால், இதோடு 2055-ஆம் ஆண்டில் தான் அது மீண்டும் பூமிக்கருகில் வருமென அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வியத்தகு நிகழ்வு, பூமிக்கு அருகிலுள்ள பொருட்களுடன் பூமி எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது.