
சென்னை, மார்ச் 26 – பிரபல இயக்குநர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் காலமானார்.
தனது தந்தையின் இயக்கத்தில் Tajmahal திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமூத்திரம், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் பல திரைப்படங்களில் நடித்து
தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.
திரைப்பட இயக்கம் உள்ளிட்ட பல துறைகளிலும் அவர் கால் பதித்துள்ளார்.
48 வயதான மனோஜ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
தொடர்ந்து வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்றுவந்த மனோஜ் நேற்று மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்ததாக
கூறப்பட்டது.
மனோஜ்ஜூக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவருக்கு மதிவதனி, ஆர்த்திகா என இரு மகள்கள் உள்ளனர்.
நடிகர் மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.