Latestமலேசியா

ஈப்போ உங்கு ஒமார் தொழிற்நுட்ப கல்லூரியில் நடத்தப்பட்டது பயங்கவரவாத நெருக்கடி மேலாண்மை பயிற்சியே; பதற்றம் வேண்டாம்

ஈப்போ, மார்ச் 17 – ஈப்போவிலுள்ள உங்கு உமர் (Ungku Omar ) தொழிற்நுட்ப கல்லூரியில் ஆயுதமேந்திய நபர்கள் குழுவொன்றின் வெடிப்பு மற்றும் தாக்குதலை இன்று காலை, பயங்கரவாத நெருக்கடி மேலாண்மை மற்றும் கையாளுதல் பயிற்சியின் ஒரு பகுதியாக 69 கமாண்டோ (Komando), சிறப்பு நடவடிக்கை குழு (PGK) மேற்கொண்டது.

சிறிய அளவிலான இந்த பயிற்சியானது, தெரியாத நபர்கள் குழு ஒன்று , விரிவுரையாளரையும் பல மாணவர்களையும் பணயக் கைதிகளாகக் தடுத்து வைத்த சம்பவத்தை உள்ளடக்கியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமட் ( Abang Zainal Abidin Abang Ahmad ) தெரிவித்தார்.

இந்த சிறிய அளவிலான பயிற்சியானது, போலீஸ் , ஈப்போ உங்கு ஒமார் (Ungku Omar )தொழிற்நுட்பக் கல்லூரி மற்றும் ராஜா பெர்மைசூரி பைனுன் (Raja Permaisuri Bainun) மருத்துவமனை உட்பட, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தயார்நிலையின் அளவைச் சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

அதன்படி, உங்கு ஒமார் (Ungku Omar ) கல்லூரி பகுதியில் விமானப்படையின் ஹெலிகாப்டர் உட்பட பல போலீஸ் பணியாளர்கள், பாதுகாப்பு மற்றும் மருத்துவ குழு வாகனங்கள் இருப்பது Ex Kurung பயிற்சியின் ஒரு பகுதியாகும்.

பயங்கரவாத நெருக்கடி மேலாண்மை செயல்திட்டத்தின் செயல்திறனை சோதிக்க அவ்வப்போது இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்படுகின்றன, இதனால் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு எப்போதும் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுவதாக அபாங் ஜைனால் அபிடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!