கோலாலம்பூர், நவ 26 – உயர்தர வேலை வாய்ப்புக்கான கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு PTPTN எனப்படும் உயர்க்கல்வி நிதிக் கழகம் முன்னுரிமை வழங்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
PTPTN கடன் பெற்றவர்கள் பட்டம் பெற்ற பிறகு வேலை வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைவதாக உயர்க்கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட்
( Musthapa Sakmud ) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதுள்ள குடும்ப வருமான வகைகளின்படி, PTPTN நிதியுதவி விகிதம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
STR எனப்படும் Sumbangan Tunai Rahmah பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவர்கள் மேற்கொள்ளும் கல்வித்துறைக்கு PTPTN னிலிருந்து 100 விழுக்காடு கடன் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள் .
8,000 ரிங்கிட்டிற்கும் குறைந்த குடும்ப வருமானம் பெறுவோர் 75 விழுக்காடு கடன்களை பெறும் தகுதியை பெறுவார்கள். 8,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலான குடும்ப வருமானம் பெறுவோர் 50 விழுக்காடு கடன் பெறுவார்கள் என்றும் முஸ்தபா கூறினார்.