Latestமலேசியா

உலக வர்த்தக கோல்ஃப் சவாலுக்குத் தயாராகும் மலேசியா

ஷா ஆலாம், ஏப்ரல்-25 , பிரசித்திப் பெற்ற WCGC ‘உலக வர்த்தக கோல்ஃப் சவால் மலேசியா 2025’ போட்டி புதன்கிழமை சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள Glenmarie Hotel & Resort Ballroom மண்டபத்தில் பிரமாண்டமான விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிலாங்கூர் பட்டத்து இளவரசரும் WCGC மலேசியாவின் அரச புரவலருமான ராஜ மூடா தெங்கு அமீர் ஷா முன்னிலையில் அது அறிமுகம் கண்டது.

வணிகமும் விளையாட்டும் பசுமையில் சங்கமிக்கும் ஓர் அற்புதமான தொடருக்கான மேடையை இப்போட்டி வழங்குகிறது.

‘WCGC மலேசியா 2025’ கோல்ஃப் போட்டி மே முதல் ஆகஸ்ட் வரை கிள்ளான் பள்ளத்தாக்கின் 4 சிறந்த கோல்ஃப் மைதானங்களில் 4 பூர்வாங்கச் சுற்றுகளுடன் நடைபெறுகிறது.

செப்டம்பர் 25-ஆம் தேதி Kota Permai Golf & Country Club-பில் தேசிய இறுதிப் போட்டி நடைபெறும்.

அந்த தேசிய இறுதிப் போட்டியின் சாம்பியனாக வாகை சூடுவோர், வரும் அக்டோபர் 19 முதல் 23 வரை சீனா, ஷங் ஹாயில் நடைபெறும் உலக WCGC இறுதிச் சுற்றில் பங்கேற்பர்.

ஆக சீனாவில் நடைபெறப் போகும் இறுதிப் போட்டிக்குத் தயாராக இந்த தேசியப் போட்டி சிறந்தப் பயிற்சிக் களமாக விளங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சீனாவின் ஹைகோவில் நடைபெற்ற WCGC உலக இறுதிப் போட்டியில் மலேசியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

உலகத் தரம் வாய்ந்த கோல்ஃப் மைதானங்கள், வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், துடிப்பான பொருளாதாரம் கொண்ட சிலாங்கூர், நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பெருநிறுவனத் தலைவர்களை வரவேற்க சரியான இடமாகும் என, WCGC மலேசியாவின் ஆலோசகர் ஹாஜி மொஹமட் சாலிம் மொஹமட் சைன் கூறினார்.

இப்போட்டியின் வழி, சுற்றுலாவை மேம்படுத்தவும், விருந்தோம்பலை வெளிப்படுத்தவும், எதிர்காலத்தில் உயர் மட்ட வணிக மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்தவும் இலக்கு வைத்துள்ளோம் என்றார் அவர்.

இந்த அறிமுக நிகழ்வில், இவ்வாண்டுக்கான நிதி ஆதரவாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

முதன்மை ஆதரவாளராக Enotech Sdn Bhd விளங்கும் வேளை, Konsortium Jaringan Selangor, Spectrum Outdoor, Simple Advantage, World Klang Group, KUSEL, Avisena Healthcare, Les Copaque Production, Cuckoo Malaysia இதர ஆதரவாளர்கள் ஆவர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!