Latestமலேசியா

கட்டுப்பாடற்ற பாலியல் உறவால் 13 வயதில் HIV நோய்; ஏய்ட்ஸ் மன்றம் பகீர் தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல்-27,

கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளால் மலேசியர்கள் வெறும் 13 வயதிலேயே HIV நோய்க்கு ஆளாகும் பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் HIV தொற்று அதிகரித்து வருவதற்கு, கட்டுப்பாடற்ற பாலியல் உறவு கலாச்சாரம் முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.

13 முதல் 19 வயதிலான பதின்ம வயதினரில் 4 விழுக்காட்டினருக்கு HIV கண்டிருப்பதாக, மலேசிய ஏய்ட்ஸ் மன்றம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

HIV தொற்று அபாயம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது கவலையாகுமென, அம்மன்றத்தின் செயலாளர் Dr சைத்தோன் யாஹ்யா கூறினார்.

எனினும், போதைப்பொருள் பழக்கத்தால் உண்டாகும் HIV நோய் தொற்று சம்பவங்கள் குறைந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது.

போதைப்பொருள் ஊசியைப் பகிர்ந்துக் கொள்வதால் ஏற்படும் அபாயம் குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் நாம் மேற்கொண்டு வருவது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.

இதையடுத்து, பாலியல் நடவடிக்கைகளால் பரவும் HIV நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

நோயாளிகள் எங்கே எப்படி உதவிகளைப் பெறலாம் என்பது வரைக்கும் ஏய்ட்ஸ் மன்றம் விழிப்புணர்வுத் திட்டங்களை அதிகரித்துள்ளதாக சைத்தோன் சொன்னார்.

சுகாதார அமைச்சு வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்கள் படி, 1986-ஆம் ஆடிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை 135, 035 HIV நோயாளிகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 54,365 பேர் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளால் அந்நோய்க்கு ஆளானவர்கள்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், கடைசியாக பதிவான 8 HIV சம்பவங்கள் 13 வயதுக்குக் கீழ்பட்டவர்களை உட்படுத்தியவையாகும்.

இவ்வேளையில், 62 விழுக்காடு HIV நோய்ப் பரவல் ஓரின மற்றும் இருபால் சேர்க்கையாளர்களை உட்படுத்தியுள்ளது.

33% சம்பவங்கள் மாற்று பாலினத்தை உட்படுத்தியிப்பது தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!