
ஜோர்ஜ் டவுன், ஜன 1 – நாட்டில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவதற்கு எதிரான கடுமையான எதிர்ப்புச் சட்டங்களை ஜாலை 1 ஆம்தேதி பினாங்கு அமல்படுத்தும் என்று அம்மாநிலத்தின் ஊராட்சி மன்றம், நகர் திட்டமிடுதல் குழுவுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹிங் மூய் லை ( H’ng Mooi Lye) தெரிவித்தார்.
செபராங் பிறை நகரான்மைக் கழகம் மற்றும் பினாங்கு தீவு நகரான்மைக் கழகம் ஆகியவை இந்த உத்தேச சட்டம் குறித்த விழிப்புணர்வைவும் அதன் சட்ட அமலாக்கத்தையும் பொதுமக்கள் அறிந்து கொண்டு, தங்களை தயார்படுத்திக் கொள்வதை அனுமதிக்கும்பொருட்டு அமலாக்க நடவடிக்கையை ஆறு மாதங்களுக்கு டிசம்பர் 17 ஆம்தேதி பினாங்கு ஆட்சிக்குழு ஒத்திவைத்தது.
“குற்றங்களுக்கு ஏற்ப அபராதம் விதிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பிற விவகாரங்களை ஆய்வு செய்ய இரு நகரான்மைக் கழகங்களும் தலா ஒரு பணிக்குழுவை உருவாக்கும் என்று Bandar Perdaவில் செய்தியாளர்களிடம் பேசியபோது H’ng Mooi Lye தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக அவர் Bandar Perda MBSP வளாகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பிறை நகரான்மைக் கழகம் மற்றும் பினாங்கு தீவு நகரான்மைக் கழகத்திற்கான உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
2007 ஆம் ஆண்டின் திடக்கழிவு ,பொது சுத்திகரிப்பு மேலாண்மை சட்டம் மற்றும் (சட்டம் 672) உட்பட பல சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ் கடுமையான தண்டனைகள், முதல் குற்றத்திற்கு 2,000 ரிங்கிட்வரை அபராதமும், 12 மணிநேரம் வரை கட்டாய சமூக சேவையும் விதிக்கப்படும்.
கூடுதலாக, குற்றவாளிகள் சிறப்பு அங்கியை அணிந்து பொது இடங்களை சுத்தம் செய்ய உத்தரவிடப்படலாம், சமூக சேவை அல்லது நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் வரை உயர்த்தப்படும் .



